’வி.பி.துரைசாமிக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது’

வி.பி.துரைசாமிக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் இரட்டைமலை சீனிவாசனின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.…

வி.பி.துரைசாமிக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இரட்டைமலை சீனிவாசனின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அரசியல் லாபத்துக்காகத் தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வி.பி.துரைசாமி நீண்ட நெடிய போராளி, அவருக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், உண்மையான சமூகநீதியைத் தேடியும் தான் திமுகவிலிருந்து பாஜகவுக்கு அவர் வந்துள்ளார் என பாஜக மாநில தலைவர் குறிப்பிட்டார். அப்போது, பாரத ரத்னா அம்பேத்கர் எதற்காக நேருவின் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்? எனக் கேள்வி எழுப்பிய அவர், அம்பேத்கரின் பெயரில் போலியான சமூகநீதி ஆட்சியைக் காங்கிரஸ் கட்சி நடத்தியது எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

https://twitter.com/annamalai_k/status/1544918758665244672

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசிலும், பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலினத்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், திமுக அரசு யாரை ஏமாற்ற முக்கியத்துவம் இல்லாத இலாகாக்களைப் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கியுள்ளது? ஏன் அவர்களால் நிதித்துறையைப் பார்த்துக்கொள்ள முடியாதா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பட்டியலின சமுதாயத்தின் முதல் பட்டதாரி இரட்டைமலை சீனிவாசன் கோவை பகுதியிலிருந்து அவர் வந்திருப்பது எனக்கும் பெருமையே. ஆனால், இரட்டைமலை சீனிவாசன் பற்றிய தகவல் எந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெறவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர்,

அவரைப் போல் சமூகநீதி போராளி யாருமில்லை எனக்கூறினார். மக்களுக்காக நிற்கும் கட்சி பாஜக எனக்கூறிய அவர், சாதி, மதங்களைக் கடந்த சித்தாந்தமே பாஜகவின் சித்தாந்தம் எனக் கூறினார். மேலும், இளையராஜாவின் வாழ்நாள் சாதனைக்கான கௌரவமே நியமன எம்.பி, பதவி எனத் தெரிவித்த அவர், இளையராஜாவுக்கும் பாஜகவுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை எனக் கூறிய அவர், திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட உடன், நாமே ஜனாதிபதி ஆனது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘‘தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சியில் இருக்கும்’ – அமைச்சர் ஐ.பெரியசாமி

திரௌபதி முர்மு கோயில் யானை போல் என்று திருமாவளவன் சொல்கிறார். இது போலி சமூக நீதி என்றும் அவர் கூறியிருக்கிறார். திருமாவளவன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று பார்க்க வேண்டும் முதல் பூஜையில் பெருமாளை எழுப்பிவைப்பதே கோயில் யானை தான் எனக் கூறிய அவர், ஜனாதிபதி வேட்பாளரைக் கோயில் யானை, கூண்டுக்கிளி என்று சொல்வதெல்லாம் என்ன மாதிரியான அரசியல்? எனக் கேள்வி எழுப்பினார். இந்நிகழ்வில் பாஜக மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், SC பிரிவு தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.