விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் நிலையில், சம்பவம் உறுதி என இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்த நாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.
லியோ திரைப்படத்திற்கான சென்சார் நேற்று நடைபெற்ற நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தன் எக்ஸ் தளத்தில், “சம்பவம் உறுதி” என லியோ டிரைலர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/anirudhofficial/status/1709587666621407242
முன்னதாக, இப்படத்தின் வசன எழுத்தாளரான இயக்குநர் தீரஜ் வைத்தி, ‘லியோ டிரைலரைப் பார்த்தேன். உங்கள் தாவம்பட்டை தரையில் இருக்கப்போகிறது’ எனக் கூறியிருந்தார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லியோ டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.







