இபிஎஸ்க்கு வாழ்த்து கூறிய தலைவர்கள்..! பட்டியலை வெளியிட்ட அதிமுக

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி K. பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும்,…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி K. பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து , அக்கட்சியில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பு வந்ததை அடுத்து, அன்றே அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும், கடிதங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக பதிவியேற்றுக்கொண்ட தனக்கு வாழ்த்து தெரிவித்த , பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர், G.K. வாசன், மத்திய இணை அமைச்சர் L. முருகன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் K. அண்ணாமலை, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, புதிய நீதிக் கட்சி தலைவர் A.C. சண்முகம், தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கே. கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் டாக்டர் பூவை. M. ஜெகன்மூர்த்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் R. சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R. தனபாலன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர், E.R. ஈஸ்வரன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி தலைவர் தலைவர் ஷேக்தாவூத், யாதவ மகா சபை தலைவர் டாக்டர் T. தேவநாதன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியோருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல், கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை யொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள, பல்வேறு தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.