திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




