தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமிற்கு ரூ.285 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,385-க்கு, சவரனுக்கு ரூ. 2,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 107,080-க்கு, விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.245 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,140-க்கு, சவரனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு சவரன் ரூ. 105,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 205க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.




