கடைசி ஒரு நாள் போட்டி; நியூசிலாந்துக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் 220 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற…

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் 220 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஒரு நாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் 12.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்ட நிலையில் மழையால் பாதியில் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறக்கியது. இதில் சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் பறிபோனது. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் 28 ரன்னும், கில் 13 ரன்னும், அடுத்து வந்த அய்யர் 49 ரன்னும், பண்ட் 10 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதற்கிடையில் களம் இறங்கிய சுந்தர் ஒரு புறம் நிலைத்து நின்று ஆடினார். பொறுமையாக ஆடிய சுந்தர் அரைசதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுந்தர் 51 ரன்கள் அடித்தார். இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு 220 ரன்கள்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.