தி.மு.க. அரசைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும் என ஆளுநர் இருப்பதாகவும், அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாக முரசொலி குற்றம்சாட்டியுள்ளது.
திமுக நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவியின் பேச்சுகள் சர்ச்சைக்குரியதாக இருப்பது மட்டுமல்ல அவரது நடவடிக்கைகளும் – சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன.
தி.மு.க. அரசைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும். அதற்காக எதையாவது சொல்வது என்று ஆளுநர் இருக்கிறார்.

ஆளுநர் அரசுக்கு கேள்வி அனுப்பி இருந்தால், அந்த கேள்விகள் ஏதோ கேட்க வேண்டும் அல்லது தாமதப்படுத்த வேண்டும் என்ற அளவில் தான் இருக்கிறதே தவிர, உண்மையான கேள்விகளாக இல்லை.
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற ஏன் தாமதம் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டுமா என்று கேலி பேசியது பா.ஜ.க. நிறைவேற்றப்பட்ட சட்டத்தை கையெழுத்துப் போட்டு அனுமதிக்காமல் ஆளுநர் இருப்பதைக் கேள்வி கேட்காத பா.ஜ.க., எதற்காக இழுத்தடிக்கிறார் ஆளுநர் என்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.







