முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம்

பரவும் புதிய “லாம்ப்டா” கொரோனா: மூன்றாவது அலையை தொடங்குமா?

புதிதாக உறுமாறி பரவி வரும் கொரோனா வகையான ”லாம்ப்டா” வேரியண்ட், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வேரியண்ட்டை விட கொடியது என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 4 வாரங்களில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ”லாம்ப்டா” கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த லாம்ப்டா வேரியண்டானது, உலகிலேயே அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நாடான பெருவில் தோன்றியதாகவும், தற்போது ப்ரிட்டன், தென் அமெரிக்கா, அர்ஜண்டீனா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அது பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வேரியண்டானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பெருவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், தற்போது அதன் வீரியம் உலகம் நாடுகளுகள் எங்கும் உச்சத்தை எட்டுகிறது என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், கொரோனாவின் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா வேரியண்ட் வகைகளை விட ”லாம்ப்டா” வேரியண்ட் தான் அதிக தொற்றைக் ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்துள்ளது.

எனினும், லாம்ப்டா வேரியண்ட் இதுவரை இந்தியாவிலோ அல்லது இந்தியாவின் அண்டை நாடுகளிலோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே இன்று வரை உள்ள நிலை. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில், இஸ்ரேலில் மட்டுமே இந்த வகை வேரியண்ட்டின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தளர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சுற்றுலா தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் அலை அலையாய் குவிந்து வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வகைகளாக உருமாறி கொண்டிருக்கும் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றுதலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதுமே அவசியமாகிறது.

Advertisement:
SHARE

Related posts

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும்: சீமான்

Gayathri Venkatesan

முதலமைச்சர் பழனிசாமியால் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது! – மு.க.ஸ்டாலின்

Saravana

அதிமுக அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள் வெற்று அறிக்கையே: வேல்முருகன்

Niruban Chakkaaravarthi