முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.18% ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் 43,733 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 43,733 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 47,240 பேர் குணமடைந்துள்ளனர். 930 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,06,63,665 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,97,99,534 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல் மொத்த உயிரிழப்பு 4,04,211 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,59,920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வரை நாடு முழுவதும் 36,13,23,548 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 19,07,216 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 42,33,32,097 ஆக உயர்ந்துள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தற்போது தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

விசிக விருப்ப மனு தாக்கல் இன்று தொடக்கம்!

Jeba Arul Robinson

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறதா?

Saravana

மக்கள் நலனுக்காக டாஸ்மாக்கை மூட வேண்டும்; நீதிபதி கிருபாகரன்

Saravana Kumar