முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

ஆட்டக்காரர்களின் வெற்றிடத்தை நிரப்பிவிடலாம்… ஆளுமைகளின் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது…


மா.நிருபன்

கட்டுரையாளர்

ஒரு அணிக்கு பேட்ஸ்மேன், பவுலர்கள் எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக மிக முக்கியம் வீக்கெட் கீப்பரின் பணி. கேட்ச், ஸ்டெம்பிங், பேட்டிங், ரன் அவுட்டில் மிக துரிதமாக செயல்படுவது, பீல்டிங், பீல்டர்களை செட் செய்வது, எல்பிடபிள்யூக்களை அப்பீல் செய்வது என்று அணியின் பலமே விக்கெட் கீப்பர்தான். Substitute இல்லாமல் 50ஓவர்களும் களத்தில் கட்டாயம் நிற்க வேண்டும் மிகவும் சவாலான பணி.

உதிரியாக செல்லும் 20 முதல் 30 ரன்களை தடுத்தாலே அணியின் பாதி வெற்றி உறுதியாகிவிடும். இந்திய அணியில் 1976 -86 கிர்மானி தான் அதிக நாட்கள் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டவர். அதற்கு பிறகு இந்திய அணிக்கு 8 ஆண்டுகள் நிலையான கீப்பர்கள் கிடைக்காமல் அணி மிகவும் தத்தளித்தது. 1994 முதல் 2001 வரை செயல்பட்ட நயன் மூங்கியாவை அடுத்த சிறந்த விக்கெட் கீப்பராக சொல்லலாம். பேட்டிங்கில் அவர் சற்று சொதப்பலான ஆட்டத்தையே மேற்கொள்வார்.

அதன்பின் MSK பிரசாத், சபாகரீம், விஜய் தாகியா, தீப்தாஸ் குப்தா, ராத்ரா, பார்தீவ், தினேஷ்கார்த்தி என்று பலர் வந்தனர். ஆனால், யாருமே அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. சில நேரங்களில் ராகுல் டிராவிட்டை கூட விக்கெட் கீப்பராக இந்திய அணி பயன்படுத்தியது. 90s கிட்ஸ்களுக்கு தெரிந்த சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் கில்கிறிஸ்ட்டை சொல்வார்கள் பின் ஆன்டி பிளவர், பவுச்சர் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் தற்சமயம் ஒட்டு மொத்த கிட்ஸ்களும், பெருசுகளும் உச்சரிக்கும் சொல் தோனி.

2005ம் ஆண்டு களமிறங்கிய தல தோனிக்கு தற்சமயம் பல அவதாரம் உண்டு. தோனியை சிறந்த கீப்பரா? சிறந்த பேட்ஸ்மேனா? சிறந்த கேப்டனா? சிறந்த ஆளுமையா? என்று கேட்டால் ” ஆளுமை” என்றே பதில் வரும். 2019 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது என்றாலும் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகாமல் கெளரவமான தோல்வியை தான் தழுவியது. பொதுவாக உலகக்கோப்பை போட்டியில் தோல்வியடையும் அணியை அந்த நாட்டினர் வறுத்தெடுப்பது, வசைபாடுவது என்பது வாடிக்கையான ஒன்று. ஒரு முறை பாகிஸ்தான் தோல்விடைந்து நாடு திரும்பும்போது விமானநிலையத்தில் பலர் கூடி எதிர்ப்பை பதிவுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விசயத்தை உடனடியாக அதாவது பேச்சுவழக்கில் சொன்னால் “சூட்டோட சூட்டா” செய்வது ஒரு விளைவை தரும் “ஆற அமர ” செய்வது வேறு விதமான விளைவை தரும் என்பது வேறு அதுபோலதான் அன்றைய நிகழ்வும் நடந்தது. இந்திய அணி மழையினால் அடுத்தநாள் விளையாடியது கூட ஒரு விதமான அழுத்தம், பதற்றமான சூழலுக்கு வித்திட்டது என்று கூட சொல்லலாம்.

இந்த இடத்தில் தோனியை பற்றி கூறியே ஆக வேண்டும். ஒரு மனிதன் தான் மட்டும் ஓடாமல் தன்னுடன் பயணிப்பவரையும் தன்னுடன் அழைத்து கொண்டு வருவதில் தான் அவரின் ஆளுமை குணம் வெளிபடுகிறது. இந்திய அணியில் சச்சின் என்ற நபரை தவிர்த்து மற்ற அனைவருக்குமே நிரந்தர இடம் என்பது கிடையாது. இக்கட்டான விமர்சனத்துக்கு உள்ளான ஜடேஜாவை தூக்கி கொண்டாட வைத்த அந்த தோனியின் ஆளுமையை நெட்டிசன்கள் கொண்டாடினர்.

முன்னாள் வீரர் மஞ்சுரேக்கர் ஜடேஜா மீது வைத்த குற்றச்சாட்டை தூள் தூளாக உடைத்து ஒரு வீரரின் திறமையின் அளவுகோலை மற்றவர்கள் தீர்மானிப்பது எப்படி? என்பதுபோல் தோனி ஜடேஜாவிற்கு அமைத்து கொடுத்த களமிருந்தது. அப்போட்டியில் ஜடேஜா சொபிக்கவில்லையென்றால் அன்றுடன் அவரோட கிரிக்கெட் வாழ்கை அஸ்தமனமானலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

ஒரு கட்டத்தில் இந்திய அணி எதிரணிக்கு தோல்வி பயத்தை காண்பித்தார்கள் அல்லவா?? அங்கதான் துரோணாச்சாரியாக தோனி இருந்தார் எனலாம் Cricket Is a Word … Dhoni Is a Emotional

Advertisement:
SHARE

Related posts

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ரூ. 8 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

Gayathri Venkatesan

கொரோனாவால் உயிரிழந்த 34 வயது சின்னத்திரை நடிகை!

Arun

தலிபானின் துப்பாக்கியை துணிவுடன் எதிர்க்கும் ஆப்கான் பெண்: வைரலாகும் புகைப்படம்

Ezhilarasan