மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவியேற்பு!

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று பதவியேற்றார்.  மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று பதவியேற்றார்.  ஆளுநர் மாளிகையில்,  ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டி, லால்துஹோமவுக்கு பதவிப்…

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று பதவியேற்றார். 

மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று பதவியேற்றார்.  ஆளுநர் மாளிகையில்,  ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டி, லால்துஹோமவுக்கு பதவிப் பிரமாணமும்,  ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இதையும் படியுங்கள்: அரசை பிறகு விமர்சித்துக் கொள்ளலாம்; மக்களுக்கு உதவுவதே முக்கியமானது – கமல்ஹாசன்

மேலும்,  சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் 11 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.  இந்த விழாவில் மிசோரம் தேசிய முன்னணி தலைவரும்,  முன்னாள் முதல்வருமான ஜோரம்தங்கா கலந்து கொண்டார்.  மேலும், எம்எல்ஏக்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர் லால்சந்தமா ரால்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லாவும் உடனிருந்தார்.  டிசம்பர் 5-ம் தேதி (செவ்வாயன்று) சோரம் மக்கள் இயக்கத்தின் சட்டமன்றக் கட்சி தலைவராக லால்துஹோமா தேர்வு செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.