முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

லட்சத்தீவுக்குள் நுழைய கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு தடை

லட்சத்தீவுக்குள் நுழைய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கும் உள்ளே வர தடைவிதித்துள்ளது.

லட்சத்தீவில் ஆளும் மத்திய அரசின் பிரதிநிதியான நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் திட்டங்கள் மற்றும் யோசனைகள் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரஃபுல் கோடாவின் நிர்வாகத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில், லட்சத்தீவினுள் நுழைய காங்கிரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கேரள இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லட்சத்தீவு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை உள்ளூர் மக்கள், அரசியல் கட்சிகளை தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வழிவகுக்கும் என்பதாலும், கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்பதாலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சூரப்பா வழக்கு தொடர்பான விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை : ஆணைய அதிகாரி கலையரசன்

Ezhilarasan

எழுவர் விடுதலை: சி.வி.சண்முகம் கருத்து

Niruban Chakkaaravarthi

இயக்குநர் ஷங்கர் படத்தில் சுதீப்?

Halley karthi