ஏரி மண்ணை விற்பனை செய்ய முயற்சி: 20 டிராக்டர்கள் சிறைபிடிப்பு!

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயத்திற்காக பயன்படுத்தபட வேண்டிய வீராணம் ஏரியின் வண்டல் மண்ணை தனியாருக்கு விற்க முன்ற 20 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாவட்ட அரசு நாளிதழில் அறிப்பு…

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயத்திற்காக பயன்படுத்தபட வேண்டிய வீராணம் ஏரியின் வண்டல் மண்ணை தனியாருக்கு விற்க முன்ற 20 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாவட்ட அரசு நாளிதழில் அறிப்பு ஒன்றை
வெளியிட்டார். அதில் விவசாய நிலத்தின் பயன்பாட்டிற்கு விவசாயம் சார்ந்த ஊராட்சி பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வண்டல் மண், களி மண்ணை ஊராட்சி பகுதிகளில் உள்ள ஏரி, குளம், மற்றும் நீர் நிலைகளில் இலவசமாக மண் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன்
பரிந்துரையின் பேரில் விண்ணப்பம் கொடுத்த காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்துக்கு
உட்பட்ட 8 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பயனாளிகள் வீராணம் ஏரி, லிங்கப்பன் ஏரி, நாகப்பன் குளம், கீழராதம்பூர் உள்ளிட்ட பல்வேறு ஏரி குளங்களில் ஜெ.சி.பி இயந்திரங்கள் கொண்டு டிராக்டர் மூலம் மண் எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சில நபர்கள் வண்டல் மண்ணை டிப்பர் ஒன்று 1000 முதல் 1500 ரூபாய் என விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. வட்டாட்சியர் தமிழ் செல்வன், கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது தனியார் இடத்தில் விற்பனை செய்ய வைத்திருந்த வண்டல் மண்ணையும், பத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களையும் அதிகாரிகள் சிறை பிடித்தார்.

இதனை பற்றி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், நிபந்தனைகளை மீறி 30 அடி முதல் 40 அடி வரை மண்ணை வெட்டி அதனை டிப்பர் மூலம் சில ஏஜென்டுகள் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால் வருங்காலங்களில் நீர் நிலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மணல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெறிவித்தனர்.

ஸ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.