நெல்லை அம்பாசமுத்திரம் அருகே லாரியும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு குழந்தை என 4 பேர் வி.கே.புரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் அம்பாசமுத்திரம் அருகே கோடராங்குளம் விலக்கு எனற பகுதியில் சென்ற போது திடீரென எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பாசமுத்திரம் போலீசார் பலியான 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







