ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவோயிஸ்ட்டில் இருந்து வெளியேறிய பெண் ஒருவர் போலீசாரின் முன்னிலையில் சரணடைந்தார்.
ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்ட்டில் இருந்த ஸ்வேதா என்ற பெண் அதில் இருந்து வெளியேறி விசாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணாராவ் முன்னிலையில் சரணடைந்தார். அவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஸ்வேதாவை பிடித்து தருபவர்களுக்கு காவல்துறையினர் 4 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தான் அவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் அவர் போலீசில் ஒப்படைத்தார். மாவோயிஸ்டுகளின் செயல்பாடு ஈர்க்கப்பட்டதால் இந்த இயக்கத்தில் சேர்ந்ததாகவும், தற்போது உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பின்மை மற்றும் காவல்துறையின் அச்சுறுத்தல் இருப்பதால் அதில் இருந்து வெளியேறியதாகவும் ஸ்வேதா தெரிவித்தார். இவரைத்தொடர்ந்து மேலும் சில மாவோயிஸ்ட்கள் போலீசில் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







