குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கிலும் எதிரொலிக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 150க்கும் அதிகமான தொகுதிகளை வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. குஜராத்தில் தொடர்ச்சியாக 7வது சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த வெற்றி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குஜராத் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது பிரதமர் மோடி மீது அம்மாநில மக்கள் வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையையும், குஜராத் மாநிலம் பாஜக ஆட்சியில் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுவதாகக் எல்.முருகன் கூறினார்.
இமாச்சல் பிரதேசத்தில் ஒரு சதவிதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை பாஜக இழந்திருப்பதாகவும் அவர் கூறினார். பாஜகவை வீழ்த்துவதற்காக ஆம் ஆத்மி நிகழ்த்திய அரசியல் குழப்பங்கள் இந்த தேர்தலில் எடுபடவில்லை என்று கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இமாச்சல் பிரதேசத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி டெபாசிட் இழந்துள்ளதாக தெரிவித்தார்.