முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத் தேர்தல்; ரவீந்திர ஜடேஜாவின் மனைவி வெற்றி

குஜராத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா வெற்றி பெற்றுள்ளார்.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதேபோல் இமாச்சலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் ஜெயராம் தாகூர் முன்னிலையில் உள்ளார். இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை கடந்து பாஜக அரசு வெற்றி உறுதியாகியுள்ளது. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது.

குஜராத்தின் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் போட்டியிட்டார். காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் ஆம் ஆத்மி வேட்பாளருக்கும் ஜடேஜா மனைவி ரிவாபாவுக்கும் இடையே தொடக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது.

பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் ரிவாபா அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். 13 சுற்றுகள் முடிவில் ரிவாபா 67 ஆயிரத்து 54 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் பிற கட்சி வேட்பாளர்களை விட 39 ஆயிரத்து 268 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியுள்ள நிலையில் பாஜக வேட்பாளரான ஜடேஜா மனைவி ரிவபாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

Halley Karthik

கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா பாதிப்பு

EZHILARASAN D

இது வளர்ச்சிக்கு பயன்படாத பட்ஜெட் – ஜி ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Web Editor