மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வரலாறு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். மன்னன் மலயத்துவச பாண்டியன்…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.

மன்னன் மலயத்துவச பாண்டியன் மற்றும் அவன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் பிள்ளை பேறு வேண்டி யாகம் செய்தனர். மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழந்தை யாகத் தீயிலிருந்து தோன்றினாள். இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்ற அசிரீரி கேட்டது. குழந்தைக்குத் “தடாதகை’ எனப் பெயரிடப்பட்டு வளர்ந்தாள்.

மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை ஆட்சி பொறுப்பேற்று நான்கு திசைகளிலும் திக்விஐயம் செய்து வென்றாள். திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போரிட்டாள். பின் சிவபெருமானைக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. இறைவனே கணவன் என அறிந்து நாணம் கொண்டாள். திருமணம் நடந்தது.

மேற்கூறிய நிகழ்வுகள் தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம், தடாதகையாரின் திருமணப் படலம் ஆகிய திருவிளையாடல் புராணக் கதைகளில் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறுசிவபெருமான் மீனாட்சியை போரில் வென்று மணம் புரிந்த திருவிளையாடல் புராண நிகழ்வே மீனாட்சி திருக்கல்யாண விழாவாக கொண்டாடப்படுகிறது.

திருக்கல்யாண திருவிழா புராணங்களிலிருந்து தொடங்கினாலும் வரலாறாக தொடர்ந்து வருகிறது. இந்த வரலாற்று நிகழ்வில் நியூஸ் 7 தமிழும் பங்கெடுக்கிறது. அம்மனின் திருக்கல்யாணத்தை NEWS 7 TAMIL BAKTHI YOUTUBE சேனலில் நேரலையில் காணுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.