கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மக பெருவிழா!

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மக பெருவிழா இன்று (பிப்.15) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாவாக மாசி மக பெருவிழா விளங்குகிறது.  அந்த வகையில் கும்பகோணம் மகாமக…

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மக பெருவிழா இன்று (பிப்.15) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாவாக மாசி மக பெருவிழா விளங்குகிறது.  அந்த வகையில் கும்பகோணம் மகாமக குளக்கரை அருகே அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா இன்று (பிப்.15) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.  இவ்விழா 10 நாட்கள் நடைபெறும்.  இந்த நிலையில் வரும் 24-ம் தேதி கும்பகோணம் மகாமக குளத்தில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற உள்ளது.

காசி விஸ்வநாதர் கோயிலை போலவே வியாழ சோமேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர்,
அபிமுகேஸ்வரர்,  கௌதமேஸ்வரர் கோயில்களிலும் இன்று மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து, சக்கரபாணி சுவாமி கோயில், வராகப் பெருமாள் கோயில் மற்றும் ராஜகோபால் சுவாமி கோயில்களில் மாசிமக விழா கொடியேற்றம் நாளை நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.