காலணிகளுக்கு பூட்டு போட்டு விட்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருப்பதி மலையில் காலணிகள் திருடுபோவதால் பூட்டு போட்டு பூட்டிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் ரத சப்தமி விழா நாளை 16ஆம் தேதி கோலாகலமாகக் நடைபெற உள்ளது. மேலும்,  காலை முதல் இரவு…

திருப்பதி மலையில் காலணிகள் திருடுபோவதால் பூட்டு போட்டு பூட்டிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் ரத சப்தமி விழா நாளை 16ஆம் தேதி கோலாகலமாகக் நடைபெற உள்ளது. மேலும்,  காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் மலையப்பசுவாமி வீதி உலா வருவதைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.

இதையும் படியுங்கள் : “உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” -வைரமுத்து உருக்கம்
இதையடுத்து,  திருப்பதிக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால்,  மலையில் உள்ள நான்கு மாட வீதிகளில் காலணிகளை அணிந்து நடமாட தடை அமலில் உள்ளது.  மேலும், பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் உள்ளன.

மேலும்,  சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அவற்றில் தங்களுடைய காலணிகளை பத்திரப்படுத்தி விட்டு கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு திரும்பி வந்தபின் எடுத்து செல்வது வழக்கம்.  தேவஸ்தானத்தின் இலவச காலணி காப்பகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.  எனவே,  சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பக்தர்கள் விட்டு செல்லும் விலை உயர்ந்த காலணிகளை குறி வைத்து சிலர் திருடி செல்வதாக கூறப்படுகிறது.


இதனால்,  பக்தர்கள் திருப்பதி மலையில் நான்கு மாட வீதிகள் அருகே
உள்ள காலணி காப்பகத்தில் தங்கள் காலணிகளை வைத்து அவற்றிற்கு பூட்டு போட்டு
பூட்டிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்கு சென்று இருக்கின்றனர்.  கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தேவஸ்தானத்தை பார்த்து இதுக்கு கூடவா பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கேள்வி எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.