சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை- நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சோமன் உயர்நீதிமன்றம்…

கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள சீமை கருவேல மரங்களை
வெட்டுவதற்கு ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சோமன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில்
மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, தானிபட்டி கிராமத்திலுள்ள வில்லூர் கம்மாய், பிள்ளையா கம்மாய், வண்ணாரக் கம்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சுமார் 13 லட்சம் மதிப்புள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டுக் கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை தானிபட்டி கிராம பொதுமக்கள் சார்பாக சுப்பிரமணி என்பவர் அரசின் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி விற்பனை செய்ய முயற்சித்து வருகிறார்.ஆகவே, அரசு சார்பில் மரங்களை வெட்டுவதற்கு பொது ஏலம் நடத்தினால் அரசிற்கு
வருவாய் கிடைக்கும். எனவே, தானிபட்டி கிராமத்திலுள்ள வில்லூர் கம்மாய், பிள்ளையா கம்மாய், வண்ணாரக் கம்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டுக் கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசிற்கு வருவாய் கிடைக்கும் வகையில் பொது ஏலம் நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிக்கவும்: வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றார் ஓ.பன்னீர்செல்வம்..!

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தானிப்பட்டி கிராம கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கான ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.