எம்.ஜி.ஆர் கோயிலுக்கு கும்பாபிஷேகம்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நத்தம் மேடு பகுதியில் முன்னாள் முதல்வர், நடிகருமான எம்.ஜி.ஆர் க்கு அவரது ரசிகர்…

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நத்தம் மேடு பகுதியில் முன்னாள் முதல்வர், நடிகருமான எம்.ஜி.ஆர் க்கு அவரது ரசிகர் கலைவாணர் என்பவர் கோயில் கட்டி வணங்கி வருகிறார். இந்த கோவிலில் எம்ஜிஆர் குழந்தையுடன் இருப்பது, முதியவர் ஒருவரை அரவணைத்து நிற்பது உள்ளிட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாலயத்தின் பன்னிரண்டாம் ஆண்டு குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் யாகம் வளர்த்து வேள்விகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் துவங்கி கோபுரத்தின் மேல் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த எம்ஜிஆரின் ரசிகர்கள், இறைவன் எம்ஜிஆர் இறைவன் எம்ஜிஆர் என்று கோஷமிட்டனர். இந்த நிகழ்வில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் ஒருவருக்கு அவரது ரசிகர் கோயில் கட்டி அதற்கு 12 ஆண்டுகள் பாதுகாத்து தற்போது கும்பாபிஷேகம் விழா கொண்டாடியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.