மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – பணி தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலை புனரமைக்க திட்ட வரையறை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.   உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலை புனரமைக்க திட்ட வரையறை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. மேலும் நூற்றாண்டு பழமையான மீனாட்சியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை புணரமைக்க அனுமதி கேட்டு கோவில் நிர்வாகம் தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பித்திருந்தது.

 

இதையடுத்து, மாநில அளவிலான திருப்பணி நிபுணர் குழு 52 பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக தற்போது புனரமைப்பு பணிக்கு திட்ட வரையறை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்த பணி இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் பணி முடிந்தவுடன் ஒப்பந்தம் விட முடிவு செய்யப்பட்டு, 2023 இறுதிக்குள் பணிகளை முடித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.