குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாபெரும் விளக்கு பூஜை!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 5,008 பெண்கள் பங்கேற்ற மாபெரும் விளக்கு…

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
கோயிலில் 5,008 பெண்கள் பங்கேற்ற மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதையும் படியுங்கள்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்!

இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  முன்னதாக கோயிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,  அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது மனைவி சாமி தரிசனம் செய்தனர்.  இந்த திருவிளக்கு பூஜையால் கோயில் வளாகமே திருவிழாக்கோலம் பூண்டது.  இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் குத்துவிளக்கு, பட்டு சேலை மற்றும் பூஜை பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.