இப்படிதான் சாக்லேட் குச்சி ஐஸ் செய்றாங்களா? – இணையத்தில் வீடியோ வைரல்!

சாக்லேட் குச்சி ஐஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஐஸ்கிரீமும் ஒன்று. ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும்…

சாக்லேட் குச்சி ஐஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஐஸ்கிரீமும் ஒன்று. ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பான்மையானோரின் ஃபேவரைட் ஃபுட் லிஸ்ட்டில் அது இடம்பிடித்துள்ளது. திருமண விருந்தில் வைக்கப்பட்டிருக்கும் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட தனி கூட்டமே இருப்பதை நம்மால் காண முடியும்.

இதையும் படியுங்கள்:  “எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

சிறுவயதில் குச்சி ஐஸ் சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும்.  ஒவ்வொரு நிறங்களில் ஒவ்வொரு சுவையில் நண்பர்களுடன் குச்சி ஐஸ் சாப்பிட்ட அழகான நினைவுகள் பலரிடமும் இருக்கும். இன்றும் குச்சி ஐஸுக்கு மவுசு குறையவில்லை. வண்டியில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த குச்சி ஐஸ், சற்று பரிணாம வளர்ச்சி பெற்று இன்று பல்வேறு கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது.

 

https://twitter.com/gunsnrosesgirl3/status/1758112420541714619?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1758112420541714619%7Ctwgr%5Edf9c9b9787ad91e97a4ba3495d76e790d4ad24a8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fhow-are-chocolate-ice-cream-sticks-mass-produced-viral-video-fascinates-people-101708088716463.html

இந்நிலையில், சாக்லேட் குச்சி ஐஸ் தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  ‘சைன்ஸ் கேர்ல்’ என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது. மேலும் இந்த வீடியோ 1.5 கோடி பார்வைகளையும் கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.