உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
10 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5.30 மணிக்கு யானையின் மீது கொடி பட்டம் வைத்து ஊர்வலம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது தசரா திருவிழா.
தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருவார். வருகிற 5ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பல லட்சகணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.
இந்த விழா நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் நியூஸ்7தமிழ் பக்தி யூடியூப் சேனலில் தொடர் நேரலையாக ஒளிபரப்பாகிறது.