கே.எஸ்.அழகிரியை மாற்றக்கூடாது என கோரி அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பெங்களூரூவில் முகாமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அவர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. புதிய தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜோதிமணி, விசுவநாதன், விஜயதரணி, சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக 11 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பெங்களூருவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இன்று மாலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: