இவர் தான் ’தலைவர் 170’ படத்தில் ரஜினிக்கு வில்லன் -உற்சாகத்தில் ரசிகர்கள்!

’தலைவர் 170’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார்…

’தலைவர் 170’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஜெயிலர் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அத்துடன் இவ்வளவு பெரிய வெற்றியைக் கண்டதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் ‘தலைவர் 170’ படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஷ்கரண் தயாரிக்கவுள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்நிலையில் இந்த பட ரிலீசுக்கு முன்பாக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது இமயமலை பயணத்தை தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இமயமலையின் பல பகுதிகளில் தியானம் மேற்கொண்டு நேற்று அவர் சென்னை திரும்பினார். இந்நிலையில் அடுத்தபடியாக ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தில் நடித்து முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனல் இப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.

இதையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் தானும் நடிப்பதாக இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது, ‘தலைவர் 171’ படத்தில் முக்கிய வேடத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகன் யாஷ் நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.