கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 27வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போரட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் நேற்றுடன் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தினர்.
மேலும் என்எல்சி நிறுவனம் சமீபத்தில் விளைபயிர்களை அழித்து விவசாய நிலத்தை அழித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
வேந்தன்







