தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம்!

தூத்துக்குடியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக…

தூத்துக்குடியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டபதி
பெருமாள் கோயிலில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள்
பால்குடம் எடுத்து கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு
வருகிறது. தூத்துக்குடி பங்களா தெருவில் பழமை வாய்ந்த கோகுல கிருஷ்ணன்
கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு,
விரதமிருந்த பெண்கள் குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர், பால்குடம் எடுத்து
ஊர்வலமாக வைகுண்டபதி பெருமாள் கோயிலிக்கு வந்து பெருமாளை வழிபட்டனர்.

பின்னர், கோகுல கிருஷ்ணன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர், அங்கு கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றுது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.