முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி

பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி லலிதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகையான லலிதா தமிழில், பரமசிவன், சுயேச்சை எம்.எல்.ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகைக்காக, 2 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள இவர், பிரபல இயக்குநர் பரதனின் மனைவி. சுமார் 550 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், தற்போது கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருக்கிறார்.

74 வயது லலிதா, கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுபற்றி மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறும்போது, கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இப்போது அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Advertisement:
SHARE

Related posts

காலிப்பணியிடங்களை அறிவித்தது இந்திய ரயில்வேத்துறை!

Jeba Arul Robinson

கன்னியாகுமரி சிறுவனுக்கு ஷு வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி!

Gayathri Venkatesan

அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

Ezhilarasan