முக்கியச் செய்திகள் சினிமா

ஜப்பானில் வெளியாகிறது கார்த்தியின் ’கைதி’

கார்த்தி நடித்துள்ள ’கைதி’ படம் ஜப்பானில் ’கைதி டில்லி’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

கார்த்தி நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ’கைதி’. நரேன், அர்ஜுன் தாஸ், மாளவிகா அவினாஷ், ஜார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்திருந்தனர்.  இந்தப் படத்தை ’மாநகரம்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இப்போது கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார்.

’கைதி’ படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. இதன் இரண்டாம் பாகமும் உருவாக இருப் பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ’கைதி’, ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.  ‘கைதி டில்லி’ என்ற பெயரில் வரும் 19 ஆம் தேதி  அங்கு ரிலீஸ் ஆகிறது. ஜப்பானில் ரிலீஸ் செய்யப்படும் கார்த்தியின் முதல் படம் இது. ஏற்கனவே அங்கு ரஜினி படங்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கைதி படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு

Gayathri Venkatesan

கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் : அமைச்சர் பெரிய கருப்பன்

Ezhilarasan

மோடி அமைச்சரவை 2.0 : 43 அமைச்சர்கள் பதவியேற்பு

Saravana Kumar