காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு | நெல்லை விரைகிறார் செல்வப்பெருந்தகை!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லை விரைகிறார். 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள…

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லை விரைகிறார்.

2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.  ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.  நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன்.

காவல் துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.  கட்சிரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று கூறினார்.

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை விரைகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.