சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடி
வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் , காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் , பங்குனி சுவாதி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் . மேலும், கொடியேற்றத்துடன் துவங்கிய விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் ஸ்ரீ வெட்டுடையார் காளி அம்மன்
சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விநாயகப் பெருமான் சிறிய
சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர், மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் தேரை
வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேர் கோவிலை சுற்றி வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வெட்டுடையார் காளி அம்மனை வழிபட்டனர்.
—கு.பாலமுருகன்







