பிரம்மாண்டமாக நடைபெற்ற கொல்லம் பூரம் – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கேரள மாநிலத்தில் கோலகலமாக நடைபெற்ற கொல்லம் பூரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். கேரளாவில் உள்ள பிரமாண்டமான கோவில் திருவிழாக்களில் ஒன்று கொல்லம் பூரம். கொல்லம் ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோவிலின் வருடாந்திர 10 நாள்…

கேரள மாநிலத்தில் கோலகலமாக நடைபெற்ற கொல்லம் பூரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

கேரளாவில் உள்ள பிரமாண்டமான கோவில் திருவிழாக்களில் ஒன்று கொல்லம் பூரம். கொல்லம் ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோவிலின் வருடாந்திர 10 நாள் திருவிழா இறுதி நிகழ்ச்சியாகும். இத்திருவிழாவில் 11 கோயில்களில் இருந்து சாமி ஊர்வலமாக ஆசிரமம் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பூரத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு ஆனை நீராட்டு நடத்தப்பட்டு பின் ‘ஆன ஊட்டு’ சடங்கு நடத்தப்பட்டு பூரம் சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சோவலூர் மோகனன் வாரியர் மற்றும் திருக்கடவூர் அகில் தலைமையில் சுமார் 250 மேள வாத்திய கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சரி மேளம் நடைபெற்றது.

பின் தாமரைக்குளம் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்திற்கும் புதியகாவு பகவதி ஆலயத்திற்கும் இடையே  வண்ணமயமான குடைமாற்றும் வைபத்தில் சுமார் 26 யானைகளின் அணிவகுப்பு மற்றும் வண்ணமுத்து மணி குடைமாற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது.

ஒவ்வொரு யானையின் மீதும் அமர்ந்திருந்தவர் வண்ண குடைகளை மாற்றி, மாற்றி எடுத்துக் காட்டினார். இதையடுத்து ஒவ்வொரு யானைகள் மீதும் நின்ற 2 பேர் வெஞ்சாமரம் மற்றும் ஆலவட்டம் வீசினர். இதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். பஞ்ச வாத்தியங்கள், இளஞ்சித்திர மேளம் முழங்க இரண்டரை மணி நேரம் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இவற்றை மக்கள் ஆரவாரங்களுடன் கண்டு ரசித்தனர். பின் திருவிழாவின் ஒரு பகுதியாக வானவேடிக்கைகள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. புட்டிங்கல் வெடி விபத்தை தொடர்ந்து நிறுத்தப்பட்ட வானவேடிக்கை கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது.

— சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.