மும்பை அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி!

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான…

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. ஆட்டத்தின் நான்காவது பந்தில் பிலிப் சால்ட் தனது விக்கெட்டினை திலக் வர்மாவிடம் இழந்தார். 3.2 ஓவரில் ரிகுவன்ஷி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

5.2 ஓவரில் சுனில் நரைன் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 7வது ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 15 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 128 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி வந்த மணீஸ் பாண்டே 42 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, ரஸல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரமன் தீப் சிங் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் மூலம் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.5 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் அடித்தார். இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்யவுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.