காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.








