சொதப்பிய ஹைதராபாத்; கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் இலக்கு

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 115 ரன்களை எடுத்துள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல்…

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 115 ரன்களை எடுத்துள்ளது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 49வது போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின.

ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஸ்வர் குமார் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் களமிறங்கினர். முதலாவதாக ஜேசன், சாஹா ஜோடியில் ஜேசன் 10 ரன்களும், சாஹா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

இவர்களுக்கு அடுத்ததாக களமிறங்கிய வில்லியம்சன் மற்றும் கார்க் தலா 26, 21 ரன்களை எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். ஆனாலும், அதிக பந்துகளை எடுத்துக்கொண்டதால் அடுத்து வந்தவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது.

இவர்களுக்கு அடுத்து அப்துல் சமத் 18 பந்துகளில் எடுத்து 25 ரன்களை எடுத்தார். பின்னர் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 115 ரன்களை மட்டுமே குவித்தது.

கொல்கத்தா அணி பொலிங்கை பொறுத்த அளவில், டிம் சவுதி, சிவம் மாவி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஷாகிப் அல் ஹசன் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் 116 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஹைதராபாத் அணி களமிறங்குகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.