கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7:30 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்த டி20 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் 12 போட்டிகளில் விளையாடி நிலையில் 7 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது
இன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்கள், கான்வே 30 ரன்கள் , அஜிங்கியா ரஹானே 16 ரன்கள், அம்பதி ராயுடு 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
சிவம் தூபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க வீரர்களாக ஜேஷன் ராய் மற்றும் ரகுமதுல்லாஹ் குர்பாஜ் ஆகியோரை இறக்கியது. ஜேஷன் ராய் 12 ரன்கள் மற்றும் ரகுமத்துல்லாஹ் குர்பாஜ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக இரண்டு பவுண்ட்ரிகளை விளாசிய நிலையில் 9ரன்களில் தீபக் சஹாரின் பந்து வீச்சில் ஜடேஜாவுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி நிதாணமாக விளையாடியது. ரிங்கு சிங் 54 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து ஆண்ட்ரே ரசல் மற்றும் நிதிஷ் ராணா ஜோடி விளையாடியது. இந்த நிலையில் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் இலக்கான 145 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடைசி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவிதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை அணியின் சார்பில் தீபக் சாஹர் 3ஓவர்களில் 27ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஸ் ராணா 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றார்.




