டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா என்ற ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், சமீபத்தில் மர்ம நபர் ஒருவரால் தொலைப்பேசியில் ரூ.40,000 பணத்தை இழந்துள்ளார்.
சைபர் கிரைமினல்கள் எப்போதும் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கொண்டு வருகிறார்கள். டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா என்ற ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவரால் ரூ.40,000 பணத்தை இழந்துள்ளார். மேலும் இங்கு விநோதமான விஷயம் என்னவென்றால், அழைப்பாளரால் தான் ஹிப்னாடிஸ் செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
Paytm UPI மூலம் இரண்டு முறை ராஜாவுக்கு ரூ.20,000 பரிமாற்றம் செய்யும்படி அவரால் கூறியுள்ளார். அழைப்பாளர் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக ராஜா விவரித்தார். மேலும் அந்த நபர் தனது மனதையும் சிந்தனை செயல்முறையையும் திசைதிருப்பியதாகவும், அவர் தனது பகுத்தறிவு சக்தியை இழந்துவிட்டதாக உணரவைத்ததாகவும் கூறினார்.
“அழைப்பாளர் எனக்குத் தெரிந்தவர் போல் நடித்து, தொலைபேசி உரையாடலின் போது, அவர் என்னை ஹிப்னாடிஸ் செய்தார். என் மனதையும் சிந்தனையையும் திசை திருப்பினார். எனது வங்கிக் கணக்கிலிருந்து Paytm UPI மூலம் தலா ரூ. 20,000 வீதம் இரண்டு கட்டங்களாக ரூ. 40,000 மோசடிப் பரிவர்த்தனைகளைப் பெற,” ராஜா பிடிஐயிடம் தெரிவித்தார்.
அழைப்பில் இருந்த நபர், ராஜாவை தனக்குத் தெரியும் என்றும், உடல்நலம் மற்றும் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவருடன் பேசினார். அவரது குரல் டாக்டரான எனது நண்பரின் குரல் போல இருந்தது என்று ராஜா கூறினார்.
தொடர்ந்து பேசிய அந்த மர்ம நபர் ராஜாவின், Paytm கணக்கிற்கு அனுப்பிய செய்தியைக் கிளிக் செய்யச் சொன்னார். செய்தியைக் கிளிக் செய்ததால், ராஜாவின் கணக்கில் இருந்து ரூ.40,000 இழப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ராஜா ஏப்ரல் 25 அன்று டெல்லி காவல்துறையிடம் இந்தச் சம்பவத்தைப் புகாரளித்தார். சைபர் நிபுணர்களின் கூற்றுப்படி, தொலைபேசி அழைப்புகளைப் பெறும்போது கவனமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த வழக்கு எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.