கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம்தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
70 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், கடந்த 19ம் தேதி மதியம் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.