கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுகுட்டி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது.
அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், 50க்கும் மேற்பட்ட கேள்விகளை தனிப்படை போலீசார் சசிகலாவிடம் எழுப்பினர். கோடநாடு பங்களாவின் சாவி யாரிடம் இருக்கும்? கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது இருந்த பணியாளர்கள் யார்? யார்? என கேட்ட தனிப்படை போலீசார், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது இருந்த பணியாளர்கள் யார்? யார்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.
மேலும், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? ஓட்டுநர் கனகராஜ் போயஸ் தோட்டத்தில் பணியாற்றினாரா? சம்பவத்திற்கு பிறகு கோடநாடு பங்களாவுக்கு நேரில் சென்றீர்களா? உயிரிழப்பு கொண்ட தினேஷ் கோடநாடு பங்களாவில் என்னவாக இருந்தார்? அவரை தெரியுமா? என சசிகலாவிடம் கேள்விகளை எழுப்பினர். நேற்றைய விசாரணை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், இன்று 2வது நாளாக சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது.







