காஞ்சிபுரம் அழகிய சிங்கர் எனும் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை சாதித்தார். இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் நரசிம்மர் ஆலயத்தில் அழகிய சிங்கர் என்னும் நரசிம்மர், அமுதவல்லி தாயார் கோயில் உள்ளது. இங்கு, புராண வரலாறு படி பிருகு மஹரிசிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்து தற்போது நரசிம்மராக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இவர் அமுதவள்ளி தாயார் உடன் ஊஞ்சலில் எழுந்தருளி சேவை சாதித்தார். சுவாமி அமர்ந்திருக்கும் இந்த ஊஞ்சல் சுற்றி பல வண்ண நிறங்களில் மாலைகள் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.
அழகிய நரசிங்கர் வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த பட்டாடை உடுத்தி தங்க, வைர
ஆபரணங்கள் சூடி அமிர்தவல்லி தாயார் உடன் மிக அழகாக காட்சியளித்தார். ஊஞ்சல் சேவையில் சாமிக்கு இருபுறமும் சங்கு, சக்கரத்துடன் கூடிய விளக்குகள்
அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் ஊஞ்சல் சேவையில் நரசிம்மர் சுவாமி தரிசனம் செய்தனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







