சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 32 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதமும் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், துமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்…

திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதமும் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், துமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (34).  இவர் கள்ளிமந்தயம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு, 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை  செய்தார். இதனால் இவரை, கள்ளிமந்தயம் காவல் நிலைய காவலர்கள் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த
நிலையில் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி முருகேசனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

—-ம.ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.