செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வரும் ஜூன் மாதம் பொதுமக்கள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூார், சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பேருந்துநிலையம் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. வருகிற ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதாக கூறினார்.
64 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில், பார்க்கிங் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, போதிய வெளிச்சம், தானியங்கி நடைமேடை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் தற்காலிமாக காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். அதன்பிறகு நிரந்தமாக இரண்டு காவல்நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் நடைமேடை வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் தவிர அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால் தான் சட்டமன்றத்தில் வருகிற ஜூன் மாதம் திறக்கப்படும் என நம்பிக்கையோடு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது என்று கூறினார்.