குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல குடிக்க வச்சுக் கொல்வதும் இனப்படுகொலை தான்! – சீமான்

குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல குடிக்க வச்சுக் கொல்வதும் இனப்படுகொலை தான் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.  எதிர்வரும் தேர்தலுக்காக நாம் தமிழர்…

குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல குடிக்க வச்சுக் கொல்வதும் இனப்படுகொலை தான் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

எதிர்வரும் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சியை பலப்படுத்தும் நோக்கில்,
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று முதல் மாவட்ட வாரியாக
சுற்றப் பயணம் மேற்கொள்கிறார். இதனை ஒட்டி இன்று முதல் தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 6 நாட்களுக்கு சீமான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் நாளான இன்று தேனி மாவட்டம் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக போடி வருகை தந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

நான் அரசியலுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது. எனது கொள்கை வேறு என் வழி தனி வழி. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். என் தலைவர் பிரபாகரனை நான் ஏற்றுக் கொண்டதைப் போல் விஜய் ஏற்பாரா மற்ற அரசியல் கட்சியினர் ஏற்பார்களா? விவசாயத்தை அரசு வேலையாக மாற்றுவேன் அது உங்களுக்கு
நகைச்சுவையாக தான் இருக்கும் அதை அவர்கள் ஏற்பார்களா. என் பாதை தனி, பயணம் தனி, லட்சியம் தனி, கொள்கை தனி இதில் மற்றவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு சண்டையிட மாட்டேன். நான் தனித்து சண்டையிடுவேன்.

ஒரு ஆட்சியின் சாதனை என்பது அரசு பள்ளியில் தேர்ச்சி, அதிகளவிலான மருத்துவர்கள், ஆட்சியாளர்கள் வெளி வருகிறார்கள். பொது மக்களுக்கு சிறந்த மருத்துவம் வழங்குதல் முன்னிட்டவைகளில் இருக்கலாம். இங்கு என்ன நடக்குது என்றால் மருத்துவத்திற்கு வந்த சிறு பிள்ளையின் கையை வெட்டி விட்டீர்கள். இந்த அளவு தான் உங்கள் சாதனை இருக்கிறது. இதைப் பார்க்காமல் டாஸ்மார்க் வருமானத்தை 45 ஆயிரம் கோடியிலிருந்து 50 ஆயிரம் கோடியாக
உயர்த்த திட்டம் தீட்டுவது, குடி பழக்கம் உள்ளவர்களை அதிகரிக்க தான்
செய்கிறீர்கள். இதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும்.

குண்டு போட்டு கொல்வது மட்டும் இனப்படுகொலை என்று சொல்ல முடியாது குடிக்க
வைத்து கொல்வதும் இனப்படுகொலை தான். தெருவுக்கு இரண்டு படித்தவன் இருப்பதை விட்டுவிட்டு, இரண்டு கடைகளை திறந்து வைத்துவிட்டு, இளைஞர் நலன், விளையாட்டு துறை இவை அனைத்தும் வெட்டிப் பேச்சு. இங்கு எப்படி இளைஞர் நலன் இருக்க முடியும்.

தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு கனிம வளம்
கடத்தப்படுகிறது. அங்கு உள்ள மலைகளை அவர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள், நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு அளிக்கப்படும் கனிம வளங்களால் கட்டப்படும் கட்டடங்கள் வருங்கால சந்ததிகளின் வீடாக இருக்காது. அவர்களின் சமாதியாக தான் இருக்கும். அளிக்கப்படும் ஒவ்வொரு மலைகளிலும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் நாம் அளித்து வருகிறோம்.

இப்போது நாம் வாங்கும் ஒரு குடம் தண்ணீர் ரூ.15. இப்போதே பதினைந்து
ரூபாய்க்கு நாம் வாங்குகிறோம் என்றால் வருங்கால சந்ததிகள் என்ன விலை கொடுத்து தண்ணீர் வாங்குவார்கள்? ஆயிரம் ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள் இதை எப்படி நம் வளர்ச்சி என்று சொல்ல முடியும். தண்ணீர் விற்பவனுக்கு தான் லாபம். தற்போது ஏன் கத்திரிக்காய், தக்காளி காய்கறிகளின் விலை ஏறி உள்ளது. காய்கறிகளை நீங்கள் அண்டை மாநிலங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதால் தான் என்று சீமான் பேசினார். அதோடு ஏன் இங்கே நீங்கள் விளைவிக்கவில்லை? எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.