“காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மும்முறை தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற பிரவீன் சித்திரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கத்தை வென்ற செல்வ பிரபு திருமாறன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் அபாரமான திறமையும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது. இந்த மகத்தான சாதனை, பதக்க வெற்றியைத் தாண்டி, இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமூட்டும் வரலாறாக அமைந்துள்ளது.

இன்னும் பல சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள்! உங்கள் சாதனை பயணம் தொடரட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.