முக்கியச் செய்திகள் சினிமா

இயக்குநர் ஷங்கர் படத்தில் சுதீப்?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில், கன்னட ஹீரோ சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த் உட்பட பலர் நடித்து வந்தனர். இந்நிலையில், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதனால் படத்தைத் தொடங்க லைகா நிறுவனம் காலதாமதம் செய்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பான் இந்தியா படமாக, மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. அடுத்து அந்நியன் படத்தை இந்தியில் அவர் ரீமேக் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை நிறைவு செய்யாமல், மற்ற திரைப் படங்களை இயக்க, ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பின்னர் இந்த வழக்கில் இரு தரப்பும் சமூகமாக பேசி முடிக்க வெண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

ஆனால், இருதரப்புக்குமான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால், மீண்டும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில், பிரபல கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

Advertisement:

Related posts

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

Ezhilarasan

கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!

Karthick

ராகுல் காந்தி தமிழக வருகை: பிரச்சார தேதிகள் அறிவிப்பு!

Saravana