அமெரிக்கா இண்டியானா மாகாணத்தின் கிரீன்வுட் நகரில் சுவாமி நாராயண் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள பிரதான பெயா்ப் பலகையில் காலிஸ்தானி பிரிவினைவாதி ஜர்னைல் சிங் பிந்ரன்வாலேவை புகழ்ந்து இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் வரையப்பட்டுள்ளன.
இதை கவனித்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக நியூயார்க் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு சிகோகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிகோகோ இந்திய துணை தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கிரீன்வுட் நகரில் உள்ள ஹிந்து கோயில் அவமதிக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமை-கூட்டுப் பொறுப்புணா்வு-விழிப்புடன் செயலாற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை நான்கு முறை இந்து கோவில்கள் தாக்கப்படுள்ளது குறிப்பிடத்தகத்து.







