இந்தியாவின் 2வது K-POP இசைக்கலைஞரானார் கேரளாவின் ஆரியா!

கேரளாவைச் சேர்ந்த ஆரியா, தென்கொரிய இசைக்குழுவில் இணைந்துள்ளதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது கே-பாப் இசைக்கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். தென்கொரிய நாடகங்களும், பாடல்களும், இசைக்குழுக்களும் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை. BTS-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க…

கேரளாவைச் சேர்ந்த ஆரியா, தென்கொரிய இசைக்குழுவில் இணைந்துள்ளதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது கே-பாப் இசைக்கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தென்கொரிய நாடகங்களும், பாடல்களும், இசைக்குழுக்களும் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை. BTS-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற அளவில், இந்தியா முழுவதும் கே-பாப் பரந்து விரிந்துள்ளது. தென்கொரிய இசையின்மீதும், இசைக்கலைஞர்கள் மீதும் இன்றைய இளைஞர் சமூகம் அதீத ஆர்வம் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஒடிசாவைச் சேர்ந்த ஸ்ரியா லெங்கா(18), பிளாக்ஸ்வான் எனும் தென்கொரிய இசைக்குழுவில் இணைந்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் கே-பாப் இசைக்கலைஞர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இவரைத் தொடர்ந்து தற்போது இன்னொருவர் கே-பாப் இசைக்கலைஞராகியுள்ளார்.

இதையும் படியுங்கள் : திமுக கோப்புகள் பற்றிய முக்கிய அறிவிப்பு – நாளை வெளியாகும் என அண்ணாமலை அறிவிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான ஆரியா, ’X:IN’ எனும் தென்கொரிய இசைக்குழுவில் இணைந்ததை அடுத்து, அவர் இந்தியாவின் இரண்டாவது கே-பாப் இசைக்கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். கடந்த மார்ச் 8 ஆம் தேதி, ஆரியாவை X:IN இசைக்குழு தனது ஐந்தாவது உறுப்பினராக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியான ’கீப்பிங் தி ஃபயர்’ எனும் X:IN குழுவின் ஆல்பத்தின்மூலம் கே-பாப் உலகில் அறிமுகமாகியுள்ளார். இந்தியாவில் இருந்து சென்ற ஆரியாவுக்கு இந்திய கே-பாப் ரசிகர்களும், தென்கொரிய ரசிகர்களும், பிறநாட்டு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.